உள்ளூர் செய்திகள்

அரியலூர் மாவட்டத்தில் விஜயதசமி கொண்டாட்டம்

Published On 2023-10-25 07:15 GMT   |   Update On 2023-10-25 07:26 GMT
  • விஜயதசமி தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்திலுள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது
  • வீடுகள்,தொழிற்சாலைகள், கடைகளில் ஆயுத கருவிகள், வாகனங்களுக்கு படையலிட்டு வழிபாடு நடைபெற்றது

அரியலூர்,

விஜயதசமி தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்திலுள்ள கோயில்களில் செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.நவராத்திரி பண்டிகை கடந்த 15 ஆம் தேதி தொடங்கியது. தினமும் ஒவ்வொரு அலங்காரத்தில் அருள்பாலிக்கும் அம்மன் 9 வது நாளான திங்கள்கிழமை சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுதபூஜை கொண்டாடப்பட்டது. இதையொட்டி வீடுகள்,தொழில்சாலைகள், கடைகளில் ஆயுத கருவிகள், வாகனங்களுக்கு படையலிட்டு வழிபாடு நடைபெற்றது.

10 ஆம் நாளான செவ்வாய்க்கிழமை விஜயதசமி பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த நாளில் கல்வியை தொடங்கினால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்பது ஐதீகம்.

அதன்படி அரியலூர் மாவட்டத்திலுள்ள பள்ளிகளில் குழந்தைகளை பெற்றோர் ஆர்வமுடன் சேர்த்தனர். மேலும் கோயில்களில் நெல்மணி, அரிசியை பரப்பி அதில் குழந்தைகளை எழுதச்செய்து கல்வியை தொடங்கினர்.

கல்லங்குறிச்சி கலியுகவரதராச பெருமாள் கோயில், அரியலூர் அலந்துறையார், கோதண்டராமசாமி, சுப்பிரமணியர் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதே போல் திருமானூர், கீழப்பழுவூர், செந்துறை, ஜயங்கொண்டம் உள்ளிட்ட பகுதியிலுள்ள பெருமாள், சிவன், அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

Tags:    

Similar News