உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெற சிறப்பு முகாம்கள்

Update: 2022-08-10 08:06 GMT
  • மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெற சிறப்பு முகாம்கள் நடைபெற்றது
  • அளவில் 20 சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன.

அரியலூர்:

அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, அரியலூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் எளிதாக அடையாள அட்டைபெறும் வகையில் குறுவட்ட அளவில் 20 சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன. இதன்படி முதல் கட்டமாக அரியலூர் குறுவட்டத்துக்கு கலெக்டர் அலுவலக வளாகதில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் இன்று (10-ந்தேதி) குவாகம் குறுவட்டத்துக்கு வாரியங்காவல் அரசு மேல்நிலைப்பள்ளியில் வருகிற 12-ந்தேதியும் முகாம் நடைபெறுகிறது.

இந்த முகாம்களில் எலும்புமுறிவு, காது, மூக்கு, தொண்டை, மனநலன், கண், குழந்தைகள் நலன் ஆகிய மருத்துவர்கள் பங்கறே்று மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசோதனை செய்து மருத்துவச் சான்றிதழ் வழங்குவர். அதனடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்.

அரியலூர் மாவட்டத்தில் இதுவரை மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறாதவர்கள் மட்டும் தங்களது ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 5, ஏற்கனவே சிகிச்சை பெற்ற மருத்துவ ஆவணங்கள் ஆகியவற்றுடன் முகாமில் பங்கேற்கலாம். 

Tags:    

Similar News