உள்ளூர் செய்திகள்

தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெற மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்

Published On 2022-08-03 09:57 GMT   |   Update On 2022-08-03 09:57 GMT
  • தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெற மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நாளை நடக்கிறது.
  • 2 இடங்களில் நடைபெறுகிறது

அரியலூர்:

தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் வழங்கப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெற்றவர்களுக்கு, பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மத்திய அரசால் மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (யு.டி.ஐ.டி. கார்டு) வழங்கப்பட்டு வருகிறது. தொலை தூரத்தில் இருந்து அடையாள அட்டை பெற வரும் மாற்றுத்திறனாளிகளின் சிரமங்களை குறைக்கும் வகையில் அடையாள அட்டை வழங்க குறுவட்ட அளவில் 20 சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு முதல் கட்டமாக 2 இடங்களில் முகாம்கள் நடைபெறுகிறது. அதன் விவரம் வருமாறு:

அழகாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளையும் (வியாழக்கிழமை), திருமழபாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை மறுநாளும் (வெள்ளிக்கிழமை) சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது. இம்முகாமில் எலும்பு முறிவு மருத்துவர், காது மூக்கு தொண்டை பிரிவு மருத்துவர், மன நல மருத்துவர் மற்றும் கண் மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர் ஆகிய அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து மருத்துவச்சான்று வழங்க உள்ளனர்.

மேற்படி மருத்துவ அலுவலர் வழங்கும் சான்றிதழின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் இதுவரை மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் மட்டும் ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-5 மற்றும் இதற்கு முன் சிகிச்சை பெற்ற ஆவணங்களுடன் வந்து கலந்து கொண்டு பயன்பெறலாம். முகாமிற்கு வரும் மாற்றுத்திறனாளிகள் கட்டாயம் முக கவசம் அணிந்து வரவேண்டும். சமூக இடைவேளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

இந்த தகவல் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News