உள்ளூர் செய்திகள்

அகவிலைப்படி உயர்வை ஜனவரி முதல் வழங்க கோரிக்கை

Published On 2022-08-17 15:09 IST   |   Update On 2022-08-17 15:48:00 IST
  • அகவிலைப்படி உயர்வை ஜனவரி முதல் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
  • அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் வலியுறுத்தல்

அரியலூர்:

தமிழக அரசு அறி வித்து ள்ள 3 சதவீத அகவிலை ப்படியை ஜனவரி மாதம் முதல் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்ரமணியன் தெரி வித்தார்.

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டியில் செய்தியாள ர்களிடம் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

தமிழக அரசு ஊழிய ர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயரவு ஜூலை 1-ம் தேதி முதல் வழ்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆனால் அரசு ஊழியர்கள் ஏற்கனவே விடுத்த கோரிக்கைப்படி ஜனவரி -ம் தேதி முதல் அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும்.

அரசு பணியாளர் சங்கம் ஏற்கனவே அறிவி த்தது போல 7 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் வருகிற 28-ந்தேதி அன்று ஆர்ப்பா ட்டம் நடத்தப்படும். துப்பு ரவுப் பணியாளர்கள் தூய்மை காவலர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் உள்ளிட்டவர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்ப டுவது இல்லை.

எனவே அவர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை அகவிலைப்படியாக வழங்க அரசு முன்வர வேண்டும்.

மேலும் அகவிலைப்படி உயர்வு பற்றி சங்கங்களை அழைத்து தமிழக அரசு இதுவரை பேச்சுவார்த்தை நடத்த முன்வரவில்லை. சங்கங்களை தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும்.

மத்திய, மாநில அரசு களுக்கு எந்த காலத்திலும் நிதி சுமை இருந்து கொண்டு தான் இருக்கும். நிதியை வளப்படுத்துவதற்கு அதிக ப்படுத்துவதற்கு ஏாளமான வழிமுறைகள் உள்ளன என்றார். 

Tags:    

Similar News