உள்ளூர் செய்திகள்

ஆக்கிரமிக்கப்பட்ட கிராமங்களை திருப்பி ஒப்படைக்க கிராம மக்கள் கோரிக்கை

Published On 2022-06-23 15:01 IST   |   Update On 2022-06-23 15:01:00 IST
  • அரியலூர் அருகே அரசு கையப்படுத்திய இரண்டு கிராமங்களை திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோட்டாட்சியரிடம் மனு
  • உச்ச நீதிமன்றம் 11 கிராமங்களுக்கு இழப்பீடு தொகையை வழங்காமல் பொதுமக்களிடம் அவர்களுடைய நிலத்தின் பட்டாவை ஒப்படைக்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சுற்றியுள்ள 13 கிராமத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் மூலம் நிலங்களை கையகப்படுத்தி இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ஆகியுள்ளது. இதனால் முழுமையாக விவசாயம் செய்ய முடியவில்லை, புதிதாக வீடு கட்ட முடியவில்லை.

கடனுதவி வாங்க மற்றும் பல்வேறு பிரச்சனைகள் இருந்து வந்த நிலையில் தற்போது உச்ச நீதிமன்றம் 11 கிராமங்களுக்கு இழப்பீடு தொகையை வழங்காமல் பொதுமக்களிடம் அவர்களுடைய நிலத்தின் பட்டாவை ஒப்படைக்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது.

அதனடிப்படையில் 11 கிராம பொதுமக்கள் வெடி வெடித்து இனிப்பு வழங்கி தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து கொண்டாடி வந்தனர்.

இந்நிலையில் மேலூர் இலையூர் கிராம பொதுமக்கள் தலைவர் வைரம் அறிவழகன் தலைமையில் உடையார்பாளையம் கோட்டாட்சியர் பரிமளம் அவர்களிடம் எங்கள் இரண்டு கிராமத்தையும் எங்களுக்கு திருப்பித்தர வேண்டும்.

எந்த இழப்பீடும் வேண்டாம். எங்கள் நிலம் மட்டுமே போதும் என மனு அளித்துள்ளனர். மனுவை பெற்றுக்கொண்ட கோட்டாட்சியர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

Tags:    

Similar News