உள்ளூர் செய்திகள்

கொள்ளிட பாலத்தில் மண் குவியலை அகற்ற கோரிக்கை

Published On 2022-07-22 13:34 IST   |   Update On 2022-07-22 13:34:00 IST
  • கொள்ளிட பாலத்தில் மண் குவியலை அகற்ற கோரிக்கை விடுத்தனர்.
  • விபத்து ஏற்பட உள்ளது

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் திருமானூரில் அமைந்துள்ள பழமை வாய்ந்த கொள்ளிட பாலத்தில் மண் குவியல் இரண்டு பக்கங்களிலும் அதிகமாக இருப்பதால் விபத்துக்கள் ஏற்படும் நிலைஉள்ளது. எனவே இரண்டு பக்கங்களிலும் உள்ள மண் குளியலை அகற்ற பொதுமக்கள் சமுக ஆர்வவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரம்பலூர்-மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில், அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பாலம் உள்ளது. இதில் 1.3 கி.மீட்டர் நீளமுள்ள இந்த பாலத்தை தாங்கி நிற்க 24 தூண்கள் உள்ளன. இதில் இரண்டு தூண்களுக்கும் நடுவில் இணைக்கும் வகையில் ரப்பர் பொருத்தப்பட்டது. தஞ்சை மாவட்டதை இணைக்கும் முக்கிய பாலமாக செயல்படுகிறது.

இந்த பாலத்தில் பொதுமக்கள் நடை பயிற்சி செய்கின்றனர். இப்பாலத்தின் இருபுறங்களிலும் மண் குவிந்து கிடக்கின்றன. இது காற்றில் பறந்து வாகன ஓட்டிகள் மற்றும் நடைபயணிகளின் கண்களில் வந்து கொட்டுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் தடுமாறி விபத்து ஏற்படும் நிலை உருவாகிறது.

தற்போது ஆற்றில் மேட்டூரில் இருந்து உபரி நீரை திறந்து விடப்பட்டதால் ஆறு முழுவதும் நீர் நிரம்பி செல்கிறது. இதை காண பொதுமக்கள் வெளியூர் செல்லும் மக்கள் நின்று கண்டு களித்து செல்கின்றனர். எனவே பாலத்தில் இருபுறமும் மண்மேடுகளை தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக அகற்றிட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Tags:    

Similar News