உள்ளூர் செய்திகள்

குடியரசு தின தடகளப் போட்டிகள்

Published On 2023-09-14 11:41 IST   |   Update On 2023-09-14 11:41:00 IST
  • அரியலூரில் வருவாய் வட்ட அளவிலான குடியரசு தின தடகளப் போட்டிகள் நடைபெறுகிறது
  • அமைச்சர் சா.சி.சிவசங்கர் போட்டிகளை தொடக்கி வைத்தார்

அரியலூர்,

அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில், பள்ளிக் கல்வித் துறை சார்பில் அரியலூர் வரு வாய் மாவட்ட அளவிலான இரண்டு நாள்கள் நடை பெறும் குடியரசு தின தடகளப் போட்டிகளை போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா தலைமை வகி த்தார். சட்டப் பேரவை உறுப்பினர்கள் சின்னப்பா, கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.குறுவட்ட அளவில் வெற்றி பெற்ற முதல் இரண்டு இடங்கள் பிடித்த மாணவ, மாணவிகள் இந்த வருவாய் மாவட்ட அள விலான போட்டிகளில் கலந்து கொண்டனர்.14, 17 மற்றும் 19 வயது என்ற அடிப்படையில் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியே போட்டிகள் நடத்தப்படுகிறது.இதில்100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், 80 மீட்டர், தடை தாண்டுதல் ஓட்டம், 100 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டம், 110 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டம், 800 மீ, 1500 மீட்டர், 3000 மீட்டர் ஓட்டம்,நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், கோலூன்றி தாண்டுதல், குண்டு எரிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் போன்ற போட்டிகள் நடைபெறுகிறது.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இடைநிலை கல்வி அலுவலர் ஜெயா, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன், அரி யலூர் வருவாய் கோட்டா ட்சியர் ராமகிருஷ்ணன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் லெனின், வட்டாட்சியர் கண்ணன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News