உள்ளூர் செய்திகள்

கால பைரவருக்கு முளைப்பாரி பூஜை

Published On 2023-01-16 12:05 IST   |   Update On 2023-01-16 12:05:00 IST
  • கால பைரவருக்கு முளைப்பாரி பூஜை
  • கால பைரவருக்கு முளைப்பாரிகை பூஜை நடைபெற்றது.

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள செங்குந்தபுரம் ஸ்ரீகாலபைரவருக்கு முளைப்பாரிகை பூஜை நடைபெற்றது. இந்த கோயில் கடந்த 2015-ம் ஆண்டு கட்டப்பட்டு, ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி அன்று சிறப்பு அபிஷேக பூஜை நடைபெற்று வருகிறது. சிவனின் பருவத்திலிருந்து தோன்றிய ஸ்ரீகாலபைரவரை வழிபட்டால் முன்வினை நீ்ங்கி, திருமணம், குழந்தைப்பேறு, வேலைவாய்ப்பு, குடும்ப ஒற்றுமை, கடன் பிரச்சினை, கல்வியில் மேன்மை, பெருவாழ்வு கிட்டும் என்பது ஐதீகம். இதனை முன்னிட்டு கடந்த மாதம், பக்தர்கள் டோக்கன் பெற்று முளைப்பாரி பூச்சட்டிகளை உருவாக்கி வளர்த்து வந்தனர். இந்நிலையில் மேளதாளங்களுடன் ஊர்வலமாக முளைப்பாரிகளை எடுத்துவந்தனர். தொடர்ந்து காலப்பைரவருக்கு பூக்களால் அர்ச்சனை செய்யப்பட்டது. பின்னர் கோயில் அருகேயுள்ள திருக்குளத்தில் முளைப்பாரிகையை மக்கள் விட்டு வழிபாடு செய்தனர். வழிபாட்டிற்கான ஊர்வலத்தில் 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு காலபைரவரை வணங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர்.

Tags:    

Similar News