உள்ளூர் செய்திகள்

ரேஷன் கடை பணியாளர் சங்கம் சார்பில் போராட்டம்

Published On 2023-09-04 15:48 IST   |   Update On 2023-09-04 15:48:00 IST
  • கூட்டுறவு துறை இணைப்பதிவாளரை கண்டித்து
  • ரேஷன் கடை பணியாளர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெறுகிறது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள குண்டவெளி கிராமத்தில் தமிழ்நாடு ரேஷன் கடை பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ரேஷன் கடை பணியாளர்களுக்கு விரோதமாக செயல்பட்டு வரும் நாகப்பட்டினம் கூட்டுறவு துறை இணைப்பதிவாளரை கைது செய்து அவர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும் தமிழக அரசு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே ரேஷன் கடை பணியாளர் சங்கத்தின் சார்பில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாநில முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்றார். அப்போது சங்கத்தின் மாநில தலைவர் ஜெயசந்திர ராஜா உடனிருந்தார்.

Tags:    

Similar News