உள்ளூர் செய்திகள்
பெரியநாயகி அம்மனுக்கு பண அலங்காரம்
- ஆடி வெள்ளியை முன்னிட்டு அரியலூர் மேலத்தெரு பெரியநாயகி அம்மனுக்கு பண அலங்காரம்
- 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயில் பண அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது
ஆடி 3-வது வெள்ளியை முன்னிட்டு அரியலூரில் உள்ள பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜை, சிறப்பு அலங்காரம், பிரார்த்தனை நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக அரியலூர் மேலத்தெரு பெரியநாயகி அம்மனுக்கு பணத்தாள்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. சுமார் 2 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான ரூபாய் நோட்டுக்களை கொண்டு பண அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை கண்டு தரிசித்து சென்றனர்.