உள்ளூர் செய்திகள்
அரியலூரில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
- அரியலூரில் வழக்கறிஞர்கள் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
- சட்டபிரிவுகளின் பெயர்களை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர்
அரியலூர்
மத்திய அரசைக் கண்டித்து அரியலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வழங்குரைஞர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் இந்திய தண்டனை சட்டம், இந்திய சாட்சிகள் சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் பெயர்களை மாற்றம் மற்றும் திருத்தம் கொண்டு வர சட்ட மசோதாவை தாக்கல் செய்தது, தொடர்ந்து ஹிந்தி மற்றும் சமஸ்கிருதம் திணிப்பில் ஈடுபட்டு வரும் மத்திய அரசைக் கண்டித்தும், மேற்கண்ட சட்ட மசோதாவை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். இணைத் தலைவர் கதிரவன், செயலர் முத்துக்குமரன், அரசு வழக்குரைஞர்கள் கதிரவன், ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.