உள்ளூர் செய்திகள்

மனைவி பிரிந்து சென்றதால் கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

Published On 2023-04-29 11:50 IST   |   Update On 2023-04-29 11:50:00 IST
  • மனைவி பிரிந்து சென்றதால் கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
  • இது குறித்து கயர்லாபாத் போலீஸ் ஸ்டேஷனில் செந்தில்குமாரின் அண்ணன் மாயவேல் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் எஸ்.ஐ. பூபாலன் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம் கயர்லாபாத் இந்திரா நகர் ராவுத்தன்பட்டி சின்னராசு மகன் செந்தில்குமார்(வயது 33). கூலி தொழிலாளி. இவருக்கு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டம் கோவிலூர் சேர்ந்த யமுனா என்பவருடன் திருமணம் நடந்து உள்ளது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டு மனைவி மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு அவரது அப்பா வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இதனால் செந்தில்குமார் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனிமையில் வசித்து வந்த செந்தில்குமார் வீட்டில் தூக்கில் அழுகிய நிலையில் தொங்கி கொண்டிருந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் கயர்லாபாத் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து கயர்லாபாத் போலீஸ் ஸ்டேஷனில் செந்தில்குமாரின் அண்ணன் மாயவேல் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் எஸ்.ஐ. பூபாலன் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Tags:    

Similar News