உள்ளூர் செய்திகள்

பெண்ணிடம் செல்போனில் ஆபாசமாக பேசிய தொழிலாளி கைது

Update: 2022-08-10 08:11 GMT
  • பெண்ணிடம் செல்போனில் ஆபாசமாக பேசிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
  • கணவரை பிரிந்து 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார்

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் வசித்து வருபவர் ரம்யா (வயது 39). இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை பிரிந்து 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்தநிலையில் இவருக்கு மர்ம ஆசாமி ஒருவர் செல்போனில் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து ரம்யா அளித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப்பதிவு செய்து ஜெயங்கொண்டம் அருகே உள்ள கடாரங்கொண்டான் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி கண்ணன் (48) என்பவரை கைது செய்தார்."

Tags:    

Similar News