உள்ளூர் செய்திகள்

கீழப்பழுர் காந்திநகரில்ரூ.4.85 லட்சத்தில் குடிநீர் வசதி

Published On 2023-11-04 13:10 IST   |   Update On 2023-11-04 13:10:00 IST
  • அரியலூர் அருகே கீழப்பழுர் காந்திநகரில் ரூ.4.85 லட்சத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டது
  • செட்டிநாடு சிமெண்ட் நிறுவனத்தால் வழங்கப்பட்டது

அரியலூர்,

அரியலூர் மாவட்டம் கீழப்பழுரில் செட்டிநாடு சிமெண்ட்ஆலை நிறுவனம் அமைந்துள்ளது. பல ஆண்டுகளாக சுற்றி அமைந்துள்ள கிராம பகுதிகளுக்கு கல்வி வசதி, மருத்துவ சேவைகள், குடிநீர் வசதிகள் உட்பட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து வருகின்றது. கீழப்பழுர் ஊராட்சி காந்திநகர் பகுதியில் பொதுமக்களின் அன்றாட குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் செட்டிநாடு சிமெண்ட் நிறுவனத்தால் அதன் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் ஒரு பகுதியாக சுமார் ஆயிரம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் ரூ. 4.85 லட்சத்தில் ஆழ்குழாய் கிணறு, மின்மோட்டார் வசதியுடன் பொது மக்கள் பயன்பாட்டிற்கு வழங்க ப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஆலையின் தலைவர் முத்தையா, ஊராட்சிமன்ற தலைவர் தனலெட்சுமி மருதமுத்து, ஆலையின் பொது மேலாளர் ராஜவேல், முத்து கருப்பன், மனிதவளம் மக்கள் தொடர்பு அலுவலர் ராஜா சிதம்பரம், வார்டு உறுப்பினர்கள், பொது மக்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News