உள்ளூர் செய்திகள்

பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

Published On 2023-01-24 06:21 GMT   |   Update On 2023-01-24 06:21 GMT
  • பொது மக்களிடமிருந்து 297 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
  • நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவு

அரியலூர்,

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், நடைபெற்ற மக்கள் குறை கேட்புக் கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து 297 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்துக்கு கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி தலைமை வகித்து, பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.மேலும் இக்கூட்டத்தில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் அரியலூர் வட்டாரத்தைச் சார்ந்த 4 உற்பத்தியாளர் குழு உறுப்பினர்களுக்கு ரூ.5,25,000 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். சென்னையில அன்மையில் நடைபெற்ற பாரா விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற பார்வையற்ற மாற்றுதிறனாளி சிவகாமி, கார்த்திக்ராஜா, வெள்ளி பதக்கம் வென்ற பாபு ஆகியோர் கலெக்டரை சந்தித்து சான்றிதழ் மற்றும் பதக்கங்களை காண்பித்து வாழ்த்துப் பெற்றனர்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட அலுவலர் முருகண்ணன் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News