உள்ளூர் செய்திகள்

தீமிதி திருவிழா

Published On 2023-07-18 13:00 IST   |   Update On 2023-07-18 13:00:00 IST
  • ஜெயங்கொண்டம் அருகே திரௌபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது
  • 150க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கினர்

ஜெயங்கொண்டம், 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நாயகனைபிரியாள் கிராமத்தில் 100 ஆண்டுக்கு மேல் பழமை வாய்ந்த திரௌபதி அம்மன் கோயில் உள்ளது. இக்கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. திமிதி திருவிழாவை முன்னிட்டு திரௌபதி அம்மனுக்கு மஞ்சள், பால், சந்தனம், தயிர், நெய், திரவியப்பொடி உள்ளிட்ட 16 வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்து, பின்னர் வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் ஏரியிலிருந்து கரகம் அலங்கரிக்கப்பட்டு வாணவேடிக்கையுடன் மேளங்கள் முழங்க முக்கிய வீதி வழியாக கரகம் கோயிலை வந்தடைந்தது. அதன் பின்னர் 150 க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து தங்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் இவ்விழாவில் ஜெயங்கொண்டம், வானதிரையன்பட்டினம், துளாரங்குறிச்சி, இடையாறு, ஏந்தல், உடையார்பாளையம், குமிழியம், பரணம் தா.பழூர், கோடங்குடி, கோட்டியால் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News