உள்ளூர் செய்திகள்

ஏலாக்குறிச்சியில் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம்

Published On 2023-02-08 10:30 GMT   |   Update On 2023-02-08 10:30 GMT
ஏலாக்குறிச்சியில் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

அரியலூர்:

அரியலூர் மாவட்டம், திருமானூர் அடுத்த ஏலாக்குறிச்சி வீரமாமுனிவர் மண்டபத்தில், தமிழ்நாடு விவசாய சங்கம் மற்றும் தமிழ்நாடு கரும்பு விவசாய சங்கத்தின் ஒன்றிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கிளைத் தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். கூட்டத்தில், சுக்கிரன் ஏரியில் இருந்து வரும் அரசன் ஏரி பாசன வாய்க்காலை தூர்வார வேண்டும்.மாவட்டத்தில் உரத் தட்டுப்பாட்டை போக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மஞ்சள் நோய் பாதிக்கப்பட்ட கரும்புக்கு உரிய நஷ்ட ஈடும் , நிவாரணமும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், அரசு அறிவித்த தொகையை விட விவசாயிகளிடம் ஏதும் பணம் வாங்க கூடாது. கண்டராதித்தம் பெரிய ஏரியிலிருந்து திருமானூர் பகுதிக்கு வரும் நந்தியாறு பாசன வாய்காலை தூர்வாரி, சேதமடைந்துள்ள கிளை வாய்க்கால் மதகுகளை சரிசெய்ய வேண்டும்.திருமானூரில் நவீன அரிசி ஆலை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், விவசாய சங்க ஒன்றியத் தலைவர் தங்கராசு, கரும்பு விவசாய சங்க மாவட்ட துணைச் செயலர் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கரும்பு விவசாய சங்க மாவட்டத் தலைவர் கரும்பாயிரம், மாவட்டச் செயலர் ஜெகநாதன், மாவட்ட துணை தலைவர் வைத்திலிங்கம், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டச் செயலர் மணிவேல் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டு பேசினர்.

Tags:    

Similar News