உள்ளூர் செய்திகள்

நீட் தேர்விற்கு விதி விலக்கு கேட்டு நிர்பந்திக்க வேண்டும் - ஜி.ராமகிருஷ்ணன்

Published On 2023-08-21 12:03 IST   |   Update On 2023-08-21 12:03:00 IST
  • பா.ஜ.க. கூட்டணியில் இருக்கும்அ.தி.மு.க. நீட் தேர்விற்கு விதி விலக்கு கேட்டு நிர்பந்திக்க வேண்டும் என்று மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஜி.ராமகிருஷ்ணன் ஆலோசனை கூறி உள்ளார்
  • அரியலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் முன்பாக செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்

அரியலூர்,

அரியலூர் அண்ணாசிலை அருகே மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியின் நிதியளிப்பு பொதுக் கூட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்பதற்காக வருகை தந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

மத்திய அரசைக் கண்டித்து, தமிழகத்திலுள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு 1 லட்சம் பேர் கலந்து கொள்ளும் மறியல் போராட்டம் நடைபெறும். இதில் அரியலூர் மாவட்டத்தில் நான்கு மையங்களில் போராட்டம் நடத்தப்படும்.

நீட் தேர்வுக்கு எதிராக திமுக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. பாஜக கூட்டணியில் உள்ள அதிமுக நீட் தேர்வுக்கு விதிவிலக்கு கேட்டு நிர்பந்தம் செய்யலாம். ஆனால் அது குறித்து எதுவும் தெரிவிக்காதது வருத்தம் அளிக்கிறது.

மாநிலங்களில் மத கலவரத்தை உண்டாக்கி அங்கு மக்களை பிரித்து தான் வெற்றிப் பெற்றுவிடலாம் என பாஜக நினைக்கிறது. இது போன்ற சூழ்ச்சி இனியும் ஒரு காலம் நடக்காது.

அரசியல் சட்டத்தையும், ஜனநாயகத்தையும், மதசார்பின்மையும், சுயசார்பின்மையும் பாதுகாக்க இந்திய கூட்டணி பாஜகவுக்கு எதிராக பிரசாரத்தை மேற்கொள்ளும். வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தோற்கடிக்க வேண்டும் என்பதே இந்திய கூட்டணியின் முக்கிய குறிக்கோளாகும்.

காவிரி பிரச்னையில் மத்திய அரசு தலையிட்டு தமிழகத்துக்கு சேர வேண்டிய தண்ணீரை திறந்து விட கர்நாடகா அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் . இந்த விசயத்தில் மத்திய அரசு வேடிக்கை பார்க்க கூடாது என்றார். பேட்டியின் போது, அக்கட்சியின் மாவட்டச் செயலர் எம்.இளங்கோவன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.வாலண்டினா, நிர்வாகி கே.கிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


Tags:    

Similar News