உள்ளூர் செய்திகள்

அரியலுாரில் விளையாட்டு அகாடமி தொடங்க, காங்கிரஸ் கோரிக்கை

Published On 2023-01-05 12:39 IST   |   Update On 2023-01-05 12:39:00 IST
  • விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்த விளையாட்டு அகாடமியை தொடங்க வேண்டும்
  • காங்கிரஸ் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் வலியுறுத்தல்

அரியலூர்,

அரியலூர் மாவட்டத்தில் விளையாட்டு அகாடமி தொடங்க வேண்டும் காங்கிரஸ் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அரியலூர் மாவட்ட விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்த விளையாட்டு அகாடமியை தொடங்க வேண்டும் என்று காங்கிரஸ் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அரியலூரிலுள்ள அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பொருப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் மாரடைப்பால் உயிரிழந்த ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை உறுப்பினர் திருமகன் ஈவேராவுக்கு இரங்கல் தெரிவிப்பது. பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதை கண்டித்து பாஜக அரசின் செயல்பாடுகளை மக்களிடம் விளக்கிச் சொல்வது, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தை விளக்கி மக்களிடம் கொண்டு சேர்ப்பது என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டத் தலைவர் ஆ. சங்கர் தலைமை வகித்தார். ஜெயங்கொண்டம் நகர தலைவர் அறிவழகன், பொதுக் குழு உறுப்பினர் சந்திரசேகர், நிர்வாகிகள் திருநாவுக்கரசு, பாலகிருஷ்ணன், கர்ணன், அழகானந்தம், கண்ணன், கங்காதுரை, வேல்முருகன், மகளிர் அணித் தலைவி மாரியம்மன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக நகர தலைவர் மா.மு.சிவகுமார் வரவேற்றார். முடிவில் மாநில பொதுக் குழு உறுப்பினர் ராஜசேகரன் நன்றி தெரிவித்தார். கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News