உள்ளூர் செய்திகள்

தேசிய திறனறிவுத் தேர்வில் வெற்ற பெற்ற மாணவர்களுக்கு கலெக்டர் பாராட்டு

Published On 2022-07-02 06:40 GMT   |   Update On 2022-07-02 06:40 GMT
  • தேர்வில் தமிழகத்தில் 5,900 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் அரியலூர் மாவட்டத்தில் 58 மாணவ மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர்
  • மாணவர்களை ஆட்சியர் அலுவலகத்துக்கு வரவழைத்த கலெக்டர் ரமணசரஸ்வதி, அவர்களுக்கு வழிக்காட்டி கையேடு வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

அரியலூர்:

தேசிய திறனறித் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரியலூர் லிங்கத்தடிமேடு வள்ளலார் கல்வி நிலைய மாணவர்களை அழைத்து கலெக்டர் ரமணசரஸ்வதி பாராட்டு தெரிவித்தார்.

2022-23 ம் கல்வி ஆண்டிற்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வு கடந்த 5.3.2022 அன்று எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு நடைபெற்றது.

இந்த தேர்வில் தமிழகத்தில் 5,900 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் அரியலூர் மாவட்டத்தில் 58 மாணவ மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர்.

இதில், அரியலூர் ஒன்றியத்தில், இலிங்கத்தடிமேடு வள்ளலார் கல்வி நிலையம், அரசு உதவிபெறும் கே ஆர் வி நடுநிலைப் பள்ளியில் பயின்று வரும் செ.விக்னேஷ், சி.ஜெயக்குமார், ஜெ.வெண்ணிலா, கோ.ஜோதி, க.யாழினி ஆகியோர் தேர்ச்சிப் பெற்றனர்.

இதையடுத்து, அவர்களை ஆட்சியர் அலுவலகத்துக்கு வரவழைத்த கலெக்டர் ரமணசரஸ்வதி, அவர்களுக்கு வழிக்காட்டி கையேடு வழங்கி பாராட்டு தெரிவித்தனர். மேலும் இவர்கள் 9-12 ம் வகுப்பு வரை மாதந்தோறும் ரூ.1000 கல்வித் தொகை வழங்கப்படும் என்று தெரிவித்தார். நிகழ்ச்சியில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சௌந்தராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News