உள்ளூர் செய்திகள்

கண்காணிப்பு குழுவில் சேர விண்ணப்பிக்க அழைப்பு

Published On 2022-10-25 12:00 IST   |   Update On 2022-10-25 12:00:00 IST
  • கண்காணிப்பு குழுவில் சேர விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
  • மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றுவதை தடுப்பதற்காக

அரியலூர்:

அரியலூர் மாவட்டத்தில், மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றுவதை தடுப்பதற்காக கண்காணிப்புக் குழுவில் சேர விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் அரியலூர் மாவட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், மனித கழிவுகளை மனிதனே அகற்றும் தொழில் புரிவோர்கள் தடுப்பு மற்றும் மறுவாழ்வுக்கான சட்டம் 2013-ன் படி மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு அமைக்கப்பட உள்ளது. குழுவில் உறுப்பினர்களாக சேர விரும்பும் அரியலூர் மாவட்டத்தில் வசிக்கும் சமூக ஆர்வலர்கள், தங்களின் முழு விபரத்துடன் நவ.10- தேதிக்குள் அரியலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News