உள்ளூர் செய்திகள்

4 கோயில் உண்டியல்களை உடைத்து திருட்டு

Published On 2023-08-20 12:22 IST   |   Update On 2023-08-20 12:22:00 IST
  • ெஜயங்கொண்டத்தில் அடுத்தடுத்து 4 கோயில் உண்டியல்களை உடைத்து திருட்டு நடைபெற்று உள்ளது
  • திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்

ஜெயங்கொண்டம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பூவாய் குளம் கிராமத்தில் மகாசக்தி மாரியம்மன் ஆலயத்தில் உள்ளே புகுந்துள்ள மர்ம நபர்கள், அங்கிருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்து ரொக்கப்பணம் மற்றும் 2 கிராம் தாலிகள் மூன்றை கொள்ளை அடித்து சென்றுள்ளனர். இதே போல காலனி தெருவில் உள்ள வீரனார் கோயில் உண்டியலை உடைத்தும்,வ ன்னியர் தெருவில் உள்ள விநாயகர் கோயில் உண்டியலை உடைத்தும் அதிலிருந்து பணம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. மேலும் கோவில் வைக்கப்பட்டிருந்த ஆம்ப்ளிபயர் உள்ளிட்ட எலக்ட்ரிக்கல் பொருட்களும் திருட்டப்பட்டு உள்ளது. மேலும் வன்னியர் தெருவில் உள்ள காளியம்மன் கோவிலில் ஏழு கிராம் தங்க தாலியும் திருடப்பட்டு உள்ளது. இது குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். அடுத்தடுத்து நான்கு கோயில்களில் திருடிய சம்பவம் பூவாயிக்குளம் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Tags:    

Similar News