உள்ளூர் செய்திகள்

50 சதவீதம் தள்ளுபடி அறிவித்தும் விற்பனை ஆகாத புத்தகங்கள்

Published On 2022-07-05 09:18 GMT   |   Update On 2022-07-05 09:18 GMT
  • 50 சதவீதம் தள்ளுபடி அறிவித்தும் புத்தகங்களை வாங்க போதிய ஆட்கள் வரவில்விலை
  • கண்காட்சி குறித்து போதிய விளம்பரங்கள் செய்யப்படவில்லை

அரியலூர்:

தமிழ்ப் பண்பாட்டுப் பேரமைப்பு சார்பில் 6-வது புத்தகக் கண்காட்சி அரியலூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற்று வந்தது. ஜூன் 24 ஆம் தேதி முதல் நடைபெற்று வந்த இந்த கண்காட்சி நேற்றுடன் நிறைவு பெற்றது.

இந்த கண்காட்சியில், நூற்றுக்கணக்கான பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள், சுமார் 83 அரங்குகளை அமைத்து தங்களது புத்தகங்களை விற்பனைக்கு வைத்திருந்தனர். நாள் தோறும் இரவு எழுத்தாளர்களின் எழுச்சியுரை, கருத்தரங்கம், பட்டிமன்றம், கலைநிகழ்ச்சிகள் இடம் பெற்றிருந்தன.

அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து பள்ளி மாணவ, மாணவிகள் வருகை புரிந்தனர். இந்த புத்தக் கண்காட்சியின் நிறைவு நாளான நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், சட்டப் பேரவை உறுப்பினர் கு.சின்னப்பா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா ஆகியோர் கலந்து கொண்டு, நேபாளத்தில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட்டில், இந்திய அணியில் இடம் பெற்ற அரியலூரைச் சேர்ந்த சந்தோஷ்க்கு புத்தகங்களை பரிசாக அளித்தனர்.

இறுதி நாளில் புத்தக விற்பனையாளர்கள் கூறுகையில், கடந்த 10 நாள்களாக நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில், புத்தகம் வாங்குவோரின் எண்ணிக்கை மிக, மிக குறைவாக இருந்ததது. ஒரு புத்தகம் 50 சதவீதம் தள்ளுபடி அறிவித்தும் கூட புத்தகங்களை வாங்க ஆளில்லை.

அரங்கிற்கான நாள் வாடகை, தங்கும் ஊழியர்களுக்கான செலவுக்கு கூட புத்தகங்கள் விற்பனையாகவில்லை. இந்த கண்காட்சி குறித்து போதிய விளம்பரங்கள் செய்யப்படவில்லை. மேலும், அரங்கு வைத்திருப்பவர்களுக்கு போதிய வசதிகளும் செய்து தரப்படவில்லை. உணவுகள் கூட சரிவர வருவதில்லை. இந்தாண்டு நஷ்டத்துடன் செல்கிறோம் என்றனர்.

Tags:    

Similar News