பா.ஜ.க. மாவட்ட செயற்குழு கூட்டம்
- பா.ஜ.க. மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.
- பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
அரியலூர்:
திருமானூரில் பாரதீய ஜனதா கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் ஒன்றியங்களுக்கு உட்பட்ட 13 கிராமங்களில் பழுப்பு நிலக்கரி மற்றும் அனல்மின் நிலையம் திட்டங்களுக்காக பொதுமக்களிடம் இருந்து நிலம் பெறப்பட்டு, தற்போது அத்திட்டத்தை தமிழக அரசு கைவிட்டது. இதனை வரவேற்பதோடு, இதனால் பாதிக்கப்பட்ட ஏழை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.5 லட்சம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதிகளில் பன்றிகள் மற்றும் வளர்ப்பு கால்நடைகள் சாலையில் படுத்துக்கொண்டு போக்குவரத்திற்கு இடையூறு செய்வதோடு, அதன் மூலம் பல்வேறு நோய்த்தொற்று வருவதற்கும் காரணமாக உள்ளது. எனவே இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரியலூர், செந்துறை உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் சிமெண்டு ஆலைகளுக்கு நிலம் கொடுத்த ஏழை விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். தொழிற்சாலையில் இருந்து வரும் புகையால் பெரும் காற்று மாசுபாடு ஏற்படுவதால், குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் கனரக வாகனங்களை இயக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் திருமானூர் கிழக்கு மண்டல தலைவர் சுரேஷ்குமார் நன்றி கூறினார்."