உள்ளூர் செய்திகள்

ஏ.ஐ.டி.யு.சி. கட்டிட தொழிலாளர் பேரவை கூட்டம்

Published On 2023-04-07 11:12 IST   |   Update On 2023-04-07 11:12:00 IST
  • ஏ.ஐ.டி.யு.சி. கட்டிட தொழிலாளர் பேரவை கூட்டம் நடைபெற்றது
  • கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

திருமானூர்:

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகில் கீழப்பழுர் தனியார் மண்டபத்தில் ஏ.ஐ.டி.யு.சி. கட்டிட தொழிலாளர் அமைப்பு நிலை பேரவை கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாநில பொது செயலாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ஆறுமுகம், மாவட்ட செயலாளர் ஜீவா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி. தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத்தை 6ஆயிரமாக உயர்த்தி தர வேண்டும், தொழிலாளர்களின் மருத்துவ சலவை வாரியமே ஏற்க வேண்டும், மேலும் திருமானூர் பகுதிகளில் கழிவுநீர் வாய்க்கால் பாதியிலேயே நிறைவடைந்து திருமானூர் காந்திநகர் வரை செல்வதற்கு கழிவு நீர் வாய்க்கால் அமைத்திட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

Similar News