உள்ளூர் செய்திகள்

ஏர் உழவர் சங்க மாநில செயற்குழு கூட்டம்

Published On 2022-11-04 15:06 IST   |   Update On 2022-11-04 15:06:00 IST
  • ஏர் உழவர் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடந்தது
  • நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தனியார் கூட்ட அரங்கில் ஏர் உழவர் சங்க தலைவர் தமிழர் நீதி கட்சி தலைவர் சுபா இளவரசன் தலைமையில் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. முன்னதாக அரியலூர் மாவட்ட செயலாளர் பாக்யராஜ் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் மாநில மகளிர் அணி தலைவி கவியரசி இளவரசன், மாநில துணைத்தலைவர் தங்கத்தமிழன், ஆசைத்தம்பி மாநில ஏர் உழவர் சங்க துணை தலைவர், தலைமை நிலைய செயலாளர் மதியழகன் கவிஞர். அறிவு மழை, புலவர் அரங்கநாடன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

செயற்குழு கூட்டத்தில் தமிழகத்தில் மருத்துவ கல்வியை தமிழில் பயில திட்டமிட்டுள்ள தமிழக அரசுக்கு தமிழ் மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும், தமிழக கல்வி முறையாக தமிழில் பயன்படுத்தப்பட வேண்டும் எனவும், மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மொழிகளை கற்பதை அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசை கூட்டத்தின் வாயிலாக கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை தமிழ் கல்வியை கட்டாயமாகவும் அரசு செயல்பாட்டின் மொழியாக இரு மொழி தவிர்த்து தமிழ் தாய் மொழியை அரசு முறையாக அறிவிக்க வேண்டும் எனவும், தமிழக நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி நீராதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

Similar News