உள்ளூர் செய்திகள்

ஒன்றிய குழு கூட்டத்தில் அ.தி.மு.க. ஒன்றிய குழு உறுப்பினர்கள் வெளிநடப்பு

Published On 2023-09-28 12:11 IST   |   Update On 2023-09-28 12:11:00 IST
  • தா.பழூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க. ஒன்றிய குழு உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்
  • ஏராளமான பணிகள் கிடைப்பில் போடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம் தா .பழூர் ஒன்றிய அலுவலகத்தில் சாதாரண ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய பெருந்தலைவர் மகாலெட்சுமி வீரமணிகண்டன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர் அமிர்தலிங்கம், நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கணக்கர் அரியதங்கம் செலவீன கணக்குகளை வாசித்தார்.முன்னதாக கூட்டத்திற்கு வந்த அனைவரையும் மேலாளர் பாக்கியராஜ் வரவேற்றார். இதில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், சிவதாஸ், லெட்சுமி, தெய்வதம்பி, சத்துணவு இளங்கோவன், ஊராட்சி ராதிகா, ஒன்றிய பொறியாளர் காமராஜர், ரேவதி, உள்ளிட்ட ஒன்றிய அலுவலக அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அ.தி.மு.க. உறுப்பினர்கள், திருவாரூர் மாவட்டத்தில் தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகியதால் தற்கொலை சம்பவம் நடந்துள்ளது. ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் பகுதிகளில் முக்கியமாக அ.தி.மு.க. ஒன்றிய குழு உறுப்பினர்கள் பகுதிகளில் ஏராளமான பணிகள் செய்யாமல் கிடைப்பில் போடப்பட்டுள்ளது என்று குற்றச்சாட்டை எழுப்பினர். இதனை கண்டிக்கும் விதமாக அசோகன் மற்றும் ஒன்றிய குழு துணை தலைவர் உள்ளிட்ட அ.தி.மு.க. ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். முன்னதாக தி.மு.க. - அ.தி.மு.க. ஒன்றிய குழு உறுப்பினர்களிடையே நீண்ட நேரம் வாக்குவாதம் நடைபெற்றது. இதனால் ஒன்றிய குழு கூட்ட அரங்கு பரபரப்பாக காணப்பட்டது. நிறைவாக ஒன்றிய துணை தலைவர் கண்ணன் நன்றி கூறினார். 

Tags:    

Similar News