உள்ளூர் செய்திகள்

நகராட்சி கடை வாடகை பாக்கி ரூ.8.50 லட்சத்தை வசூலிக்க நடவடிக்கை

Published On 2023-02-21 15:16 IST   |   Update On 2023-02-21 15:17:00 IST
  • அரியலூர் நகர்மன்ற கூட்டம்
  • நகராட்சி கடை வாடகை பாக்கி ரூ.8.50 லட்சத்தை வசூலிக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டது

அரியலூர்:

அரியலூர் நகர்மன்ற அலுவலக கூட்டமன்றத்தில் நகர்மன்ற கூட்டம் நகராட்சி தலைவர் சாந்தி கலைவாணன் தலைமையில் நடைபெற்றது, நகராட்சி துணைதலைவர் கலியமூர்த்தி முன்னிலையில்நகராட்சி ஆனையர் (பொ) தமயந்தி வரவேற்று பேசினார், நகராட்சி சேர்மன் நேர்முக உதவியாளர் செந்தில்குமார் தீர்மானங்கள் வாசித்தார். ரூபவ் நகர்மன்ற உறுப்பினர்கள், ஜேசுமேரி, செல்வராணி, சத்ய ன்ரூபவ்கண்ணன், ரேவதி, மகாலெட்சுமி, இன்பவள்ளி, முகமதுஇஸ்மாயில், மலர்கொடி, வெங்கடாஜலபதி ரூபவ் ஜெயந்தி, ராணி, ராஜேஸ், ஜீவா, புகழேந்தி, நகரமைப்பு ஆய்வாளர் செந்தில் நகராட்சி வருவாய் ஆய்வாளார் ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.இந்த கூட்டத்தில் 19 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன.இதில் அ.தி.மு.க. கவுன்சிலர் கள் நகராட்சி கடைகளை வாடகைக்கு எடுத்து ஏலம் எடுத்தவர்கள் கடையை நடத்தாமல் வேறு நபர்களுக்கு உள்வாடகைக்குவிட்டுள்ளனர்அதன்படி 24 நபர்கள் 8.50 லட்சம் வாடகை பாக்கி வைத்துள்ளனர், எந்த காரணம் முன்னிட்டு வாடகை பாக்கியை தள்ளுபடி செய்ய கூடாது நகராட்சி சார்பில் வாடகை பாக்கி கட்டக்கோரி நோட்டீஸ் கொடுக்க வேண்டும். தவறினால் மாவட்ட கலெக்டர் அனுமதி பெற்று கடையை பூட்டி சீல் வைக்கவேண்டும். சொத்துக்களை ஜப்தி செய்ய கோர்ட் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

Tags:    

Similar News