உள்ளூர் செய்திகள்

இ-சேவை மையங்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை

Published On 2022-09-30 07:11 GMT   |   Update On 2022-09-30 07:11 GMT
  • இ-சேவை மையங்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
  • அதிக வசூல் செய்வது தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்

அரியலூர்:

அரியலூர் மாவட்டத்தில் தனியார் இ-சேவை மையங்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும், பல தனியார் கணினி மையங்களில், பொது மக்கள் பயன்பாட்டிற்காக மட்டும் உருவாக்கப்பட்ட இ-சேவை மையங்களில் வருவாய்த் துறை சான்றிதழ்கள், உதவித் தொகை கோரும் திட்டங்களுக்காக பொதுமக்கள் விண்ணப்பிக்கும் போது அதிக கட்டணம் பெறுவதாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளது.

வருவாய்த்துறை சான்றுகளின் விண்ணப்பம் ஒன்றுக்கு ரூ.60, ஓய்வூதிய திட்டம் தொடர்பான விண்ணப்பம் ஒன்றுக்கு ரூ.10, சமூகநலத்துறை திட்டங்கள் தொடர்பான விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்தவற்கு மனு ஒன்றுக்கு ரூ120, இணையவழி பட்டா மாறுதல் தொடர்பான விண்ணப்பம் ஒன்றுக்கு ரூ60 சேவைகட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தொகையை விட கூடுதலாக கட்டணம் வசூல் செய்தால் அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் பொது இ-சேவை மைய உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும். பொதுமக்கள் இடைத்தரகர்களை தவித்து, பொது இ-சேவை மையங்கள் மற்றும் அரசு உரிமம் பெற்ற தனியார் கணினி மையங்களை அணுக வேண்டும்.மேலும் சான்றிதழ்கள் விண்ணப்பிக்க அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக வசூல் செய்வது தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News