உள்ளூர் செய்திகள்
ஜெயங்கொண்டம் நான்கு ரோடு சந்திப்பில் மது போைதயில் வாலிபர் ரகளையில் ஈடுபட்டார்
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் நாகமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் முருகானந்தம் (வயது38). இவர் ஜெயங்கொண்டம் தனியார் டீக்கடை ஒன்றில் வடை மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அவர் மது போதையில் ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் கடும் ரகளையில் ஈடுபட்டதுடன் பஸ் வரும் நேரத்தில் சாலை நடுவே படுத்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அவர் டாஸ்மாக் கடையில் மது பாட்டில்கள் கூடுதலாக ரூ.5 மற்றும் ரூ.10க்கு விற்பனை செய்யப்படுவதாக போதையில் கத்தி கூச்சலிட்டார். இதனால் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நீண்ட நேரம் போராடி அந்த போதை ஆசாமியை சமாதானப்படுத்தினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.