உள்ளூர் செய்திகள்
ஜல்லிக்கட்டு காளை வளர்போருக்கு மாதம் ஆயிரம் வழங்கக் கோரிக்கை
- ஜல்லிக்கட்டு காளை வளர்போருக்கு மாதம் ரூ.1,000 வழங்ககக் கோரி அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணாவிடம் மனு அளிக்கப்பட்டது
- ஜல்லிகட்டு காளையுடன் வந்து மனு அளித்தனர்
அரியலூர்,
ஜல்லிக்கட்டு காளை வளர்போருக்கு மாதம் ரூ.1,000 வழங்ககக் கோரி அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணாவிடம், தஞ்சை ருத்ரன் ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர் இளையராஜா உள்ளிட்டோர் கோரிக்கை மனு அளித்தனர்.
திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்துள்ளப்படி, ஜல்லிக்கட்டு காளை வளர்போருக்கு மாதம் ஆயிரம் வழங்க வேண்டும். மாடு பிடி வீரர்களுக்கு காப்பீடு வழங்க வேண்டும். ஜல்லிக்கட்டு காளைகள் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் போது ஏதேனும் அசம்பாவிதம் நடைபெற்றால் காளைகளுக்கு காப்பீடு வழங்க வேண்டும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
முன்னதாக காளைகளுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த அவர்களை, நுழைவு வாயிலேயே போலீசார் தடுத்து நிறுத்தி மனு அளிக்க 5 பேருக்கு மட்டும் அனுமதி அளித்தனர்.