உள்ளூர் செய்திகள்

300 விநாயகர் சிலைகள் கொள்ளிடம் ஆற்றில் கரைப்பு

Published On 2022-09-03 09:17 GMT   |   Update On 2022-09-03 09:17 GMT
  • 300 விநாயகர் சிலைகள் கொள்ளிடம் ஆற்றில் கரைக்கப்பட்டது.
  • பக்தர்கள் பூஜை செய்து வழிப்பட்டனர்

அரியலூர்:

விநாயகர் சதுர்த்தியையொட்டி கடந்த 31 ஆம் தேதி அரியலூர் மாவட்டத்தில் 300 சிலைகள் இந்து அமைப்புகள் மற்றும் தனியாரால் வைக்கப்பட்டு பக்தர்கள் பூஜை செய்து வழிப்பட்டனர். கடந்தாண்டு போலவே நிகழாண்டு புதிய இடங்களில் சிலைகள் வைக்க காவல்துறையினர் அனுமதியளிக்க வில்லை. இதையடுத்து விசர்ஜனம் எனும் சிலைகள் கரைப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதற்காக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடத்தப்பட்டு, கொள்ளிடம் ஆறு மற்றும் நீர்நிலைகளில் விசர்ஜனம் செய்யப்பட்டது.

ஜெயங்கொண்டம், மீன்சுருட்டி, ஆண்டிமடம், உடையார்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்ட சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அணைக்கரையில் கரைக்கப்பட்டன. திருமானூர், கீழப்பழுவூர், திருமழபாடி,தா.பழூர் உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்ட சிலைகள் கொள்ளிடம் ஆற்றிலும், அரியலூர் பகுதியில் வைக்கப்பட்ட சிலைகள் மருதையாற்றிலும், செந்துறை, பொன்பரப்பி பகுதிகளில் வைக்கப்பட்ட சிலைகள் அந்தந்த பகுதியிலுள்ள ஏரி,குளங்களில் விசர்ஜனம் செய்யப்பட்டது.மீதமுள்ள சிலைகள் நாளை விசர்ஜனம் செய்யப்படுகிறது.

விசர்ஜனம் நிகழ்ச்சியையொட்டி, சிலை ஊர்வலத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.சிலை ஊர்வலம் நடக்கும் பகுதிகள்,பதற்றமான பகுதிகள்,மசூதிகள் உள்ள பகுதிகளில் காவல் துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News