உள்ளூர் செய்திகள்

கூழாங்கற்களை லாரியில் கொண்டு சென்ற 2 பேர் கைது

Published On 2022-08-18 14:48 IST   |   Update On 2022-08-18 14:48:00 IST
  • கூழாங்கற்களை லாரியில் கொண்டு சென்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • கிராம நிர்வாக அலுவலர் பரணி குமார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள மதனத்தூர் மாரியம்மன் கோவில் பகுதியில் வாழைக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் பரணி குமார் தனது உதவியாளருடன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள நடியப்பட்டு பகுதியில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்த 2 டிப்பர் லாரிகளை தடுத்து நிறுத்தினார். இதில், விருத்தாச்சலம் தாலுகா கொட்டாரக்குப்பம் பகுதியை சேர்ந்த வீரமணி, பாலக்கொல்லை நரியப்பட்டு பகுதியை சேர்ந்த நாராயணசாமி ஆகியோர் டிப்பர் லாரியை ஓட்டி வந்தது தெரியவந்தது. மேலும் இவர்கள் ஆழ்துளை கிணறு அமைத்து பைப்புகள் அமைக்கும் பொழுது ஆழ்துளை கிணற்றின் பக்கவாட்டில் கொட்டும் கூழாங்கற்களை லாரியில் எடுத்து சென்றது தெரிய வந்தது. மேலும் இது சட்டவிரோத செயல் என்பதால் அவர்கள் 2 பேரையும் தா.பழூர் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் 2 டிப்பர் லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

Similar News