உள்ளூர் செய்திகள்

திருமானூரில் , தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை ஏற்றி வந்த 2 சரக்கு ஆட்டோக்கள் பறிமுதல்

Published On 2022-09-25 12:11 IST   |   Update On 2022-09-25 12:11:00 IST
  • ஆட்டோவில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், போதை பாக்குகள் என 32 மூட்டைகள் இருந்தன.
  • இதையடுத்து புகையிலை பொருட்களுடன் 2 சரக்கு ஆட்டோக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

 அரியலூர் :

அரியலூர் மாவட்டம் திருமானூர் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதேவி தலைமையிலான போலீசார் ஏலாக்குறிச்சி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியே வந்த 2 சரக்கு ஆட்டோக்களை தடுத்து சோதனை நடத்தினர். ஆட்டோவில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், போதை பாக்குகள் என 32 மூட்டைகள் இருந்தன.

இதையடுத்து புகையிலை பொருட்களுடன் 2 சரக்கு ஆட்டோக்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சரக்கு ஆட்டோக்களை ஓட்டி வந்த மேலவரப்பங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த நீதிமொழி (வயது 32), முருகேசன் (50) ஆகியோரை கைது செய்தனர்.

பின்னர் அவர்கள் 2 பேரும் அரியலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News