உள்ளூர் செய்திகள்
வீட்டில், கடைகளில் பதுக்கி வைத்து மது விற்பனை - 2 பேர் கைது
- மதுவை பதுக்கி வைத்து விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
- மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் சம் இன்ஸ்பெக்டர் லோகநாதன் தலைமையிலான போலீசார் சாத்தம்பாடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மது விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின்படி சாத்தம்பாடி செக்காள் தெருவை சேர்ந்த நீலகண்டன் (வயது 24) என்பவரது வீட்டில் சோதனை செய்தனர்.
அப்போது அவரது வீட்டிலிருந்து விற்பனை செய்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். அதேபோல் கொரைக்குரி நடுத்தெருவை சேர்ந்த மோகன்தாஸ் (23) என்பவரது பெட்டிக்கடையில் சோதனை செய்தபோது விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.