உள்ளூர் செய்திகள்

வீட்டு கதவை உடைத்து 10 சவரன், ரூ.30 ஆயிரம் கொள்ளை

Published On 2023-04-25 10:55 IST   |   Update On 2023-04-25 10:55:00 IST
  • மகள் வீட்டிற்கு தாய் சென்றிருந்தபோது பின் கதவை உடைத்து கொள்ளை
  • கைரேகை நிபுணர், மோப்பநாய் உதவியுடன் போலீசார் விசாரணை

உடையார்பாளையம், 

அரியலூர் மாவட்டம் தா.பழூர் இடங்கண்ணி கிராமத்தைச் சேர்ந்த அறிவழகன் என்பவரின் மனைவி சாந்தி. கடந்த சனிக்கிழமை வீட்டை பூட்டிவிட்டு ஆண்டிமடத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றுள்ளார்.இந்தநிலையில், இன்று காலை இடங்கண்ணி கிராமத்தில் அவரது வீட்டின் அருகில் இருந்த உறவினர்கள் வீட்டின் தோட்டத்தில் இருந்த நாய்க்கு உணவு வைக்க சென்றபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதைப் பார்த்த அதிர்ச்சி அடைந்தவர்கள் தா.பழூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.இதற்கிடையில் சம்பவம் பற்றி கேள்விப்பட்ட சாந்தி ஆண்டிமிடத்திலிருந்து தா.பழூர் வந்து சேர்ந்தார். இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் அங்கு வந்து பார்த்த போது வீட்டில் பின்பக்க கதவில் தாழ்ப்பாழ் நெம்பி உடைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.வீட்டிற்குள் சென்று பார்த்த போது இரண்டு அறைகளில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோவில் வைத்திருந்த 10 சவரன் தங்க நகைகளும், ரூ.30 ஆயிரம் ரொக்கமும் திருடப்பட்டது தெரியவந்தது. இதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தடையவியல் நிபுண் சப்-இன்ஸ்பெக்டர் துர்கா வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் கைரேகை உள்ளிட்ட தடயங்கள் சேகரிக்கப்பட்டது.போலீஸ் மோப்பநாய் மலர் வரவழைக்கப்பட்டு சோதனை செய்ததில் மலர் சிறிது தூரம் மோப்பம் பிடித்து ஓடி நின்று விட்டது. இது குறித்து வழக்கு பதிந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News