திட்டக்குடி அருகே கோவில் கும்பாபிஷேகம் நடத்துவதில் இருதரப்பினர் வாக்குவாதம்
- கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த புத்தேரி கிராம பொதுமக்கள் ஏற்பாடு செய்து வருவதாக கூறப்படுகிறது.
- கும்பாபிஷேகம் நடத்துவதற்கு தன்னிச்சை யாக செயல்பட்டு வருவதா கவும் கூறினார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்துள்ள தொளார் ஊராட்சிக்கு உட்பட்ட புத்தேரி கிராமத்தில் செல்வ விநாயகர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில்உள்ளது. இதில் செல்வ விநாயகர் கோவிலுக்கு கும்பாபி ஷேகம் நடைபெற்று சுமார் 12 ஆண்டுகள் ஆகிவிட்டதால் தற்பொழுது மீண்டும் கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த புத்தேரி கிராம பொதுமக்கள் ஏற்பாடு செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலை யில் அதே கிராமத்தை சேர்ந்த ராதா கிருஷ்ணன் மனைவி தமிழ்மணி தான் பரம்பரை அறங்காவலராக உள்ளதாகவும். சிலர் தன்னிச்சையாக இந்து அறநிலையத்துறையிடம் அனுமதி ஏதும் பெறாமல், பொதுமக்களிடம் வரி வசூல் செய்து கோவிலை இடித்து விட்டு புதியதாக திருப்பணி மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்துவதற்கு தன்னிச்சை யாக செயல்பட்டு வருவதா கவும் கூறினார்.
இது குறித்து ஒரு தர ப்பினர் ஆவினங்கு டிபோலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் ஆவினங்குடி போலீ சார் திட்டக்குடி இன்ஸ்பெக்டர் சீனிபாபு, அறநிலை துறை ஆய்வாளர் தமிழ்ச்செல்வி ஆகியோர் இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை செய்தனர். பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் இன்று திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் முன்னிலையில் இருதரப்பி னரையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தப்படும் என தெரிவித்தனர். அதுவரை எந்த பிரச்சனை யும் ஈடுபடக்கூடாது என இரு தரப்பினரிடமும் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு உருவானது.