கோப்பு படம்
திருவட்டார் பஸ் நிலையத்தில் குடிபோதையில் 2 பேர் தகராறு
- மது போதையில் அருவருப்பான செயல்களில் ஈடுபட்டனர்
- போலீசார் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரனை
கன்னியாகுமரி:
திருவட்டார் பஸ் நிலையம் எப்போதும் பரப்பரப்பாக காணப்படும் அதன் அருகில் போஸ்ட் ஆபிஸ், அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்கள் உள்ளன. காலை, மாலை வேளைகளில் பஸ் ஏறுவதற்கு மாணவ, மாணவிகள் அதிகம் பேர் இந்த பஸ் நிலையத்தில் காத்து நிற்பது வழக்கம். அதன் அருகில் தென் இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற ஆதிகேசவன் பெருமாள் கோவிலும் அமைந்து உள்ளது.
இந்த நிலையில் பஸ் நிலையம் அருகே அரசுக்கு சொந்தமான மதுபான கடையும் செயல்பட்டு வருகிறது. இதனால் இளை ஞர்கள் முதல் பெரியவர்கள் வரை தினமும் மது அருந்திக் கொண்டு பஸ் ஏறுவதற்கு இங்குதான் வருவார்கள்.
இதில் போதை தலைக்கு ஏறிய ஆசாமிகள் சிலவேளைகளில் அரு வருப்பான செயல்களில் ஈடுபடுவார்கள்.
இந்த நிலையில் நேற்று மாலையில் குமரன்குடி, செம்பருத்தி காளை விளை பகுதியை சேர்ந்த சுனில் (வயது 34) மற்றும் ராஜேந்திரன் (43) 2 பேரும் சேர்ந்து மது போதையில் அருவருப்பான செயல்களில் ஈடுபட்டு வந்தனர் இதனால் அந்த பகுதியில் பஸ் ஏறுவதற்கு நின்றவர்கள் முகம் சுளிக்கும் நிலை ஏற்ப்பட்டது. உடனே அந்த பகுதியில் நின்றவர்கள் திருவட்டார் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து 2 பேரையும் காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று விசா ரனை நடத்தினார்கள் திருவட்டார் உதவி ஆய்வா ளர் ஜெயராம் சுப்ரமணியன் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தினார்.