உள்ளூர் செய்திகள்

அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சி.

உயர் மின் அழுத்த கம்பிகளை குடியிருப்பு வழியே கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம்

Published On 2023-07-28 10:51 IST   |   Update On 2023-07-28 10:51:00 IST
  • மிகக் குறுகலான தெருக்களில் உயர் மின்ன ழுத்த கம்பி வழித்தடத்தை மின்வாரிய ஊழியர்கள் அமைக்கும் பணியை கடந்த சில நாட்களாக மேற்கொண்டு வந்தனர்.
  • குடியிருப்பு மக்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து மின்வாரிய ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தேவதானப்பட்டி:

தேனி மாவட்டம் தேவ தானபட்டி அருகே ஜெய மங்கலம் சத்யாநகர் பகுதி யில் உள்ள மிகக் குறுகலான தெருக்களில் உயர் மின்ன ழுத்த கம்பி வழித்தடத்தை மின்வாரிய ஊழியர்கள் அமைக்கும் பணியை கடந்த சில நாட்களாக மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் குறுகிய தெருக்களில் உள்ள வீடுகளின் மிக அருகில் உயர் மின்னழுத்த மின்சார கம்பிகள் கொண்டு செல்வத ற்காக மின்கம்பங்கள் ஊன்றப்பட்டது.இதனைத் தொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள் மின் கம்பிகளை பொருத்தும் பணிக்காக வந்தனர். அப்போது குடி யிருப்பு மக்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து மின்வாரிய ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர்.

இதனைத் தொடர்ந்து அங்கு வந்த ஜெயமங்கலம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின் மின்வாரிய ஊழியர்கள் பணியை நிறுத்திவிட்டு மின் இணைப்பு இணைப்பதற்காக கொண்டு வந்த மின் உபகரணங்களை திருப்பி எடுத்துச்சென்றனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், மிகக் குறுகிய தெருக்களில் உள்ள வீடுகளின் மிக அருகாமை யில் மின் கம்பங்களை நிறுவி மின்சாரம் கொண்டு செல்லப்படுவதால், பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

இதனால் விபத்து களும், உயிரிழப்புகளும் ஏற்படுமோ என்ற அச்சம் உள்ளது. வீடுகள் இல்லாத பகுதிகளில் சென்ற உயர் மின் அழுத்த வழித்தடத்தை ஒரு சிலரின் சுயலாபத்தி ற்காக குறுகிய தெருக்களில் உயர் மின்னழுத்த வழித்த டத்தை கொண்டு வருகின்ற னர் என்றனர். இச்சம்பவ த்தால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News