உள்ளூர் செய்திகள்

தும்பல் கல்வட்டங்கள் ஆய்வு செய்த தொல்லியல் துறையினர்.

தும்பல் கல்வட்டங்கள் குறித்து தொல்லியல் துறையினர் ஆய்வு

Published On 2022-06-09 07:06 GMT   |   Update On 2022-06-09 07:06 GMT
தும்பல் கல்வட்டங்கள் குறித்து தொல்லியல் துறையினர் ஆய்வு செய்தனர்.

வாழப்பாடி:

1000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்கள், இறந்துபோன முதியோர்களின் உடல்களை தடிமான சுடு மண் பானைகளில் வைத்து நிலத்தில் குழி தோண்டி புதைத்து வைத்துள்ளனர்.

இவற்றையே முதுமக்கள் தாழி என்றழைக்கின்றோம். மக்கள் வாழ்வியல் கலாச்சாரத்தை சித்தரிக்கும் இந்த முதுமக்கள் தாழியில் இறந்து போன முதியோர்களின் உடல்கள் மட்டுமின்றி, இவர்கள் பயன்படுத்திய ஓரிரு பொருட்களையும் சேர்த்தும் புதைத்துள்ளனர்.

இந்த ஈமத்தாழி நினைவுச் சின்னங்களை சுற்றி, வட்டவடிவில் கற்களை பதித்து வைத்துள்ளனர். இதனால், இந்த ஈமச்சின்னங்கள் கல் வட்டம் என வரலாற்று ஆய்வாளர்களால் அழைக்கப்படுகிறது.

வாழப்பாடி அருகே பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் தும்பல் கிராமத்தில், 1000 ஆண்டுகளுக்கு முன் மக்கள் வாழ்ந்ததற்கு வரலாற்றுச் சான்றாக, தும்பல்- கோட்டப்பட்டி பிரதான சாலையையொட்டி, அரசு ஆரம்ப சுகாதார நிலை–யத்திற்கு வடக்கு புறத்தில் தனியார் நிலத்தில் இன்றளவும் ஏராளமான கல் வட்டங்கள் காணப்படுகின்றன. இதை சேலம் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த பொன்.வெங்கடேசன், பொன்னம்பலம் உள்ளிட்ட குழுவினர் 2016-ம் ஆண்டு கண்டறிந்து ஆவ–ணப்படுத்தினர்.

கல் வட்டங்கள் அமைந்துள்ள பகுதி தனியார் நிலம் என்பதால் செங்கல் சூளைக்கு மண் எடுக்கும் போது பல கல் வட்டங்கள்

Tags:    

Similar News