உள்ளூர் செய்திகள்

பள்ளியில் இடைநின்ற மாணவி.

ஆழ்வார்திருநகரியில் இடைநின்ற மாணவியை பள்ளியில் சேர்த்த போலீஸ் டி.எஸ்.பி.க்கு பாராட்டு

Published On 2023-03-22 08:18 GMT   |   Update On 2023-03-22 08:18 GMT
  • குடும்ப சூழ்நிலை காரணமாக லோகநாதனின் மூத்த மகள் தாமரைகனி கடந்த மூன்று மாதங்களாக பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளார்.
  • ஸ்ரீவைகுண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு மாயவன் மற்றும் போலீசார் நாசரேத் மகளிர் மேல் நிலை பள்ளி தலைமை ஆசிரியரை சந்தித்து மாணவியை பள்ளியில் சேர்த்தனர்.

தென்திருப்பேரை:

தூத்துக்குடி மாவட்டத்தி லுள்ள பள்ளிகளில் கல்வி பயிற்று படிப்பை பாதியில் நிறுத்திய மாணவ- மாணவிகளை கண்டு அறியப்பட்டு அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ந்து படிக்கவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்கவும் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு பாலாஜி சரவணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன் பேரில் ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு மாயவன் தலைமையில், ஆழ்வார் திருநகரி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொ ண்டதில் ஆழ்வார் திருநகரி அண்ணா நகரிலுள்ள கூலி தொழிலாளி லோகநாதன். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளன. மூத்த மகள் 9-வது வகுப்பும், இரண்டாவது மகள் 8-வது வகுப்பும் நாசரேத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்துள்ளனர். மனைவி ஏற்கனவே இறந்து விட்ட நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக மூத்த மகள் தாமரைகனி கடந்த மூன்று மாதங்களாக பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளார். உறவினர்கள் மாணவியிடம் பள்ளிக்கு ஏன் செல்லவில்லை என்று கேட்டதற்கு சரியான பதிலும் சொல்லவில்லை எனவும், மாணவியின் தகப்பனார் லோகநாதன் மதுவுக்கு அடிமையான நிலையில் மகள்களை சரிவர கவனிக்கவில்லை எனவும் உறவினர்கள் வீட்டில் தங்கி இருப்பதும் தெரியவந்தது.

இதன் பெயரில் ஸ்ரீவை குண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு மாயவன் மற்றும் போலீசார் மாணவியின் உறவினர்கள் வீட்டிற்கு நேரடியாக சென்று அறிவுரை வழங்கியதில் மேற்கொண்டு படிக்க ஒத்துகொண்ட நிலையில் படிப்பதற்கு தேவையான உபகரணங்கள் காவல்துறையினர் சார்பில் வாங்கி கொடுத்து பள்ளிக்கு அவரது காரில் நாசரேத் மகளிர் மேல் நிலை பள்ளி தலைமை ஆசிரியரை சந்தித்து பள்ளியில் சேர்த்தனர். மேலும் மாணவி சம்பந்தப்பட்ட தகவலுக்கு எங்களை தொடர்பு கொள்ளுங்கள் என கூறி வந்தனர். மேலும் மாணவியின் தகப்பனார் லோகநாதன் குடிப்பழக்க த்தில் இருந்து விடுபட்டு மகள்களை சரியாக கவனிக்கவும் அறிவுரைகள் கூறினார்கள்.

ஏற்கனவே கருங்குளம் பகுதியை சேர்ந்த மாணவர் ஒருவர் ஆழ்வார் திருநகரி டீக்கடையில் வேலை பார்த்து வந்ததும் அவரை மீண்டும் பள்ளியில் சேர்க்க டி.எஸ்.பி. மாயவன் நடவடிக்கை எடுத்தது குறிப்பிடத்தக்கது. காவல்துறையின் நடவடிக் கைகளுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Tags:    

Similar News