உள்ளூர் செய்திகள்

தேனி நட்டாத்தி மருத்துவமனைக்கான பாராட்டு சான்றிதழை உறவின்முறை செயலாளர் கமலக்கண்ணனிடம் கலெக்டர் முரளிதரன் வழங்கினார்.

காப்பீட்டு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனைக்கு பாராட்டு சான்றிதழ் கலெக்டர் முரளிதரன் வழங்கினார்

Published On 2022-09-24 12:57 IST   |   Update On 2022-09-24 12:57:00 IST
  • காப்பீடு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனை மற்றும் கருத்தரித்தல் மையத்துக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
  • விழாவில் பலர் கலந்து கொண்டனர்.

தேனி:

தமிழகத்தில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் மற்றும் பிரதமமந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் 5வது ஆண்டு தொடக்க நாளையொட்டி இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிக்கு பாராட்டு சான்றிதழ், பயனாளிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

விழாவுக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கினார். விழாவில் இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனை மற்றும் கருத்தரித்தல் மையத்துக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. அந்த சான்றிதழை தேனி நட்டாத்தி நாடார் உறவின்முறை செய லாளர் கமலக்கண்ணனிடம் கலெக்டர் முரளிதரன் வழங்கினார்.

இதேபோல் கம்பம் ஆஸ்பத்திரிக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் இந்த திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிக் கொண்டு இருக்கும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், திட்ட அலுவலர்கள் உள்ளிட்ட பணியாளர்க ளுக்கு சான்றிதழ்களும், பய ன்பெற்ற பயனாளிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பரிமளாச்செல்வி, மாவட்ட காப்பீட்டு திட்ட அலுவலர் ராஜா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News