உள்ளூர் செய்திகள்

புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் தேர்வு எழுதியவர் பாராட்டப்பட்டார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா

Published On 2023-08-18 09:19 GMT   |   Update On 2023-08-18 09:19 GMT
  • பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
  • பள்ளிக்கு விடுப்பு எடுக்காமல் வந்த மாணவர்களுக்கு எழுது பொருட்கள் வழங்கப்பட்டது.

வேதாரண்யம்:

வேதாரண்யம் அடுத்த கோடியக்காட்டில் உள்ள சுந்தரம் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

விழாவிற்கு ஊராட்சி தலைவர் தமிழ்மணி தலைமை தாங்கினார்.

முன்னதாக தலைமை ஆசிரியர் நீலமேகம் அனைவரையும் வரவேற்றார்.

விழாவில் ஊராட்சி துணைத்தலைவர் சரவணன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சதக்கத்துல்லா, முன்னாள் ஊராட்சி தலைவர் பவானி, மீனவர் சங்க தலைவர் பக்கிரிசாமி, ஊராட்சி செயலாளர் சுபா, கிராம நிர்வாக அலுவலர் இளங்கோவன் மற்றும் பெற்றோர்கள், முன்னாள், இந்நாள் மாணவர்கள், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் பொதுத்தேர்வி ல் முதல் 3 இடங்களை பிடித்த மாணவிகளுக்கும், மாவட்ட அளவிலான தூய்மை பாரத எழுத்தறிவு போட்டியில் முதல் பரிசு பெற்ற மாணவி கிருத்திகாஸ்ரீ-க்கும், புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் மாவட்ட அளவில் சிறந்த மையமாக தேர்வு செய்யப்பட்டு மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் அமைச்சர் வழங்கிய சுழற்கோப்பை, பாராட்டு சான்றிதழ், பதக்கம் பெற்றதற்காக தலைமை யாசிரியர் நீலமேகத்திற்கும், தன்னார்வலர் மீனாம்பாள் மற்றும் புதிய பாரத எழுத்தறிவு திட்ட தேர்வின் போது மனைவி இறந்த நிலையிலும் தேர்வு எழுதிய நாகரத்தினத்திற்கு சால்வை அணிவித்து, அவரிடம் மதுரையில் வழங்கப்பட்ட சுழற்கோப்பையை நாகாரத்தினத்திடம் வழங்கி பாராட்டினர்.

மேலும், போட்டி தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு, கலை நிகழ்ச்சிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு, பள்ளிக்கு விடுப்பு எடுக்காமல் வந்த மாணவ- மாணவிகளுக்கு எழுது பொருட்கள், நினைவு பரிசுகள் வழங்கபட்டது.

மேலும், பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு தலைமையாசிரியர் நீலமேகம் பரிசு வழங்கினார்.

முடிவில் பள்ளி ஆசிரியர் கவிதா நன்றி கூறினார்.

Tags:    

Similar News