உள்ளூர் செய்திகள்

புதியதாக பணியமர்த்தப்பட்டுள்ள தொழில்நுட்ப உதவியாளர்களுக்கு மாவட்ட கலெக்டர் சாந்தி பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

25 தொழில்நுட்ப உதவியாளர்களுக்கு பணி நியமன ஆணைகள்

Published On 2023-05-01 08:24 GMT   |   Update On 2023-05-01 08:24 GMT
  • உதவியாளர்கள் 6 மாத காலத்திற்கு தொகுப்பூதிய அடிப்படையில் புதியதாக பணி யமர்த்தப்பட்டுள்ளனர்.
  • பணியின் போது எந்த ஒரு சுணக்கமும் தொய்வும் இல்லாமல் பணியாற்றிட வேண்டும்

தருமபுரி,

தருமபுரி மாவட்டம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் 6 மாத காலத்திற்கு தொகுப்பூதிய அடிப்படையில் புதியதாக பணியமர்த்தப்பட்டுள்ள 25 தொழில்நுட்ப உதவியாளர்களுக்கு மாவட்ட கலெக்டர் சாந்தி பணி நியமன ஆணைகளை வழங்கி, தொழில்நுட்ப பயிற்சியினை தொடங்கி வைத்தார்.

தருமபுரி மாவட்டத்திலுள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராம ஊராட்சிகளில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 49 ஊராட்சி ஒன்றிய துவக்க, நடுநிலைப் பள்ளிகள் ரூ.740.330 லட்சம் மதிப்பீட்டிலும், முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 300.59 கி.மீ நீளமுள்ள 232 சாலைப் பணிகள் ரூ.121.00 கோடி மதிப்பீட்டிலும் மேம்படுத்தப்பட உள்ளது.

இதற்காக தரக் கட்டுபாட்டிற்காகவும் பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்திடவும் 25 தொழில்நுட்ப உதவியாளர்கள் 6 மாத காலத்திற்கு தொகுப்பூதிய அடிப்படையில் புதியதாக பணி யமர்த்தப்பட்டுள்ளனர்.

மேலும், தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் நுணுக்கங்களை பயிற்சியாளர்களுக்கு எடுத்துரைத்து பணியின் போது எந்த ஒரு சுணக்கமும் தொய்வும் இல்லாமல் பணியாற்றிட வேண்டும் என கலெக்டர் சாந்தி தொழில்நுட்ப உதவியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தீபனாவிஸ்வேஸ்வரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சீனிவாசன், உதவி பொறியாளர்கள் பாலாஜி, காயத்ரி, கண்காணிப்பாளர் மணிவண்ணன் உட்பட தொடர்புடைய அலு வலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News