தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு-கிருஷ்ணகிரி மதியழகன் எம்.எல்.ஏ. அறிக்கை
- உரிய ஆவணங்க ளுடன் வருகிற ஜூலை 5-ந் தேதிக்குள், விண்ணப்பப் படிவம் பெற்றவர்க ளிடத்திலேயே திரும்ப கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
- ஒன்றிய, நகர, பேரூர் பொறுப்பு களுக்கு விண்ணப் பிப்பவர்கள் 35 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.மதியழகன் எம்.எல்.ஏ. வெளி யிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
தி.மு.க. தலை வரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் படியும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பிற்கிணங்க, தமிழக உணவுத்துறை அமைச்சரும், கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான சக்கரபாணி ஆலோசனையின்படி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி ஒன்றிய, நகர, பேருர் பகுதிகளுக்கு அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர் பொறுப்பிற்கு விண்ணப் பங்கள் வரவேற்கப்படு கிறது.
இப்பொறுப் பிற்கு விண்ணப் பிக்க விருப்ப முள்ளவர்கள் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. அலுவல கத்திலும், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்க ளிடத்தில் விண்ணப்பப் படிவங்களை பெற்று பூர்த்தி செய்து, உரிய ஆவணங்க ளுடன் வருகிற ஜூலை 5-ந் தேதிக்குள், விண்ணப்பப் படிவம் பெற்றவர்க ளிடத்திலேயே திரும்ப கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மேலும், ஒன்றிய, நகர, பேரூர் பொறுப்பு களுக்கு விண்ணப் பிப்பவர்கள் 35 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பத்துடன் கல்வி சான்றிதழ், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள நகல் இணைக்க வேண்டும். விண்ணப்பத்தில் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்ட வேண்டும். தற்போது உள்ள இளைஞரணி நிர்வாகிகள் மீண்டும் அப்பொறுப்பிற்கு வர விரும்பினால், மேற்கண்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தில் கேட்கப் பட்டுள்ள அனைத்து விவரங் களையும் தெளிவாகவும், முழுமை யாகவும் பூர்த்தி செய்து வழங்கிட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.