உள்ளூர் செய்திகள்
பிளாஸ்டிக் தீமை குறித்த பதாகைகள் ஏந்தி ஊர்வலமாக சென்ற காட்சி.
குருவன்கோட்டையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
- பேரணியை ஆலங்குளம் யூனியன் தலைவர் திவ்யா மணிகண்டன் தொடங்கி வைத்தார்.
- மாணவ- மாணவிகள் பிளாஸ்டிக் தீமை குறித்த பதாகைகளை ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே உள்ள குருவன் கோட்டையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பேரணியை ஆலங்குளம் யூனியன் தலைவர் திவ்யா மணிகண்டன் தொடங்கி வைத்தார். மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த பெண்கள் மற்றும் குருவன்கோட்டை இந்து தொடக்கப்பள்ளியை சேர்ந்த பள்ளி மாணவ- மாணவிகள் இந்தப் பேரணியில் கலந்து கொண்டு பிளாஸ்டிக் தீமை குறித்த பதாகைகளை ஏந்தியபடி விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பி அனைத்து தெருக்களிலும் ஊர்வலமாக சென்றனர்.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திலகராஜ், பார்த்தசாரதி, ஊராட்சி தலைவர் பால் தாய், துணைத் தலைவர் கண்ணன் உள்பட பலர் இப்பேரணியில் பங்கேற்றனர். பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு மஞ்சள் பை வழங்கப்பட்டது.