உள்ளூர் செய்திகள்
போதைப்பொருள் ஒழிப்பு தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்.
ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு தினம்
- செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு தினம் கொண்டாடப்பட்டது.
- வடகரை பேரூராட்சி மன்ற தலைவர் ஷேக் தாவுத், மாணவ-மாணவிகளிடையே போதைப் பொருளின் தீமை குறித்து உரையாற்றினார்.
தென்காசி:
செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வடகரை பேரூராட்சி மன்ற தலைவரும், தி.மு.க. மாவட்ட பொருளாளருமான ஷேக் தாவுத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ-மாணவிகளிடையே போதைப் பொருளின் தீமை குறித்து உரையாற்றினார்.
விழாவிற்கு கம்பீரம் பாலசுப்பிரமணியம், ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். மேலும் பள்ளியின் செயலாளர் முகமது பண்ணையார் தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி மற்றும் முதல்வர் சமீமா பர்வீன் முன்னிலையில் மாணவ-மாணவிகள் போதைப்பொருள் தடுப்பு உறுதி மொழி ஏற்றனர்.