உள்ளூர் செய்திகள்
மாமல்லபுரத்தில் போலீசார் நடத்திய போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி
- அறுபதுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
- பேரணியின் இறுதியில் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் அறிவுரைகளை வழங்கினார்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் காவல் நிலையம் சார்பில் போதைப்பொருள் பயன்பாடு தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து கடற்கரை கோயில் வரை நடைபெற்றது. பேரணியை டி.எஸ்.பி. ஜெகதீஸ்வரன் துவக்கி வைத்தார். 60க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
பேரணியின் இறுதியில் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், போதை பழக்கத்தால் ஏற்படும் தீமைகள், குற்ற செயல்கள், உடல்நலம் பாதிப்பு, எதிர்காலம் சீரழிந்து போவது குறித்து கல்லூரி மாணவர்களுக்கு எடுத்து கூறி அறிவுரைகளை வழங்கினார்.