உள்ளூர் செய்திகள்

கையெழுத்து இயக்கத்தை கலெக்டர் மகாபாரதி கையொப்பமிட்டு தொடங்கி வைத்தார்.

குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு கையெழுத்து இயக்கம் தொடக்கம்

Published On 2023-06-13 09:33 GMT   |   Update On 2023-06-13 09:33 GMT
  • குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவதில் இந்தியாவில் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழும்.
  • 2025-க்குள் மயிலாடுதுறையை குழந்தை தொழிலாளர் இல்லா மாவட்டமாக மாற்ற வேண்டும்.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலககூட்ட ரங்கில் குழந்தை தொழி லாளர் முறையினை அகற்று வதற்காக உறுதிமொழி மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் எடுத்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து கலெக்டர் பேசியதாவது:-

குழந்தைத் தொழிலாளர் முறையினை அகற்றுவதில் தமிழ்நாடு இந்தியாவில் முன்னோடி மாநிலமாக திகழும் நிலையில் முதல்-அமைச்சரின் ஆணைக்கிணங்க 2025-ம் ஆண்டுக்குள் மயிலாடுதுறை மாவட்டத்தை குழந்தைத் தொழிலாளர் இல்லாத மாவட்டமாக மாற்ற அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

முன்னதாக குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு கையெழுத்து இயக்கத்தை முதல் கையொப்பமிட்டு மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) நரேந்திரன் , மயிலாடுதுறை தொழிலாளர் உதவி ஆணையர் ஞானபிரகாசம், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரேகா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News