கோப்பு படம்.
தேனி மாவட்டத்தில் இருந்து ஆண்டுதோறும் 200 டன் முருங்கை இலை ஐரோப்பிய, ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி
- அதிக குளிரும், ஆப்பிரிக்க நாடுகளில் மாறுபட்ட சீதோஷ்ண நிலையும் இருப்பதால் நோய்எதிர்ப்பு சக்தி அதிகரிக்க முருங்கை இலைகளை பயன்படுத்து கின்றனர்.
- ஆப்பிரிக்க நாடுகளில் உணவுகழக அதிகாரிகள் சோதனைக்குபிறகும் நார்ச்சத்துகள் அதிகளவில் உள்ளதாக ஒப்புதல் பெற்று விவசாயிகள் முருங்கை இலைகளை ஏற்றுமதி செய்து வருகின்றனர்.
தேனி:
தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஆறுமுகம் நிருபர்களிடம் கூறியதாவது, முருங்கையில் பல வகைகள் உள்ளன. தேனி மாவட்டம் வலையபட்டியில் முருங்கை 2900 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்படுகிறது. 1500-க்கும் மேற்பட்ட சிறுவிவ சாயிகள் முருங்கை சாகு படியில் ஈடுபட்டுள்ளனர்.
முருங்கை மண்டலத்தில் தேனி உள்ளதால் இங்கு அதிநவீன சாகுபடி உத்திகள் கையாளப்பட்டு ஏற்றுமதி தரம் வாய்ந்த முருங்கை இலைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதுதவிர முருங்கைக்காய் 25 செ.மீ நீளமும், 170 கிராம் எடையிலும் இருக்கும். ஒரு மரத்தில் இருந்து ஆண்டுக்கு 1500 காய்கள் வரை காய்க்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதால் முருங்கை இலைகளுக்கு ஐரோப்பிய, ஆப்பிரிக்க நாடுகளில் அதிகவரவேற்பு உள்ளது.
ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகளில் அதிக குளிரும், ஆப்பிரிக்க நாடுகளில் மாறுபட்ட சீதோஷ்ண நிலையும் இருப்பதால் நோய்எதிர்ப்பு சக்தி அதிகரிக்க முருங்கை இலைகளை பயன்படுத்து கின்றனர். ஐேராப்பிய யூனியன் உணவு கழகத்தின் ஒப்புதல் பெறப்பட்டும், ஆப்பிரிக்க நாடுகளில் உணவுகழக அதிகாரிகள் சோதனைக்குபிறகும் நார்ச்சத்துகள் அதிகளவில் உள்ளதாக ஒப்புதல் பெற்று விவசாயிகள் முருங்கை இலைகளை ஏற்றுமதி செய்து வருகின்றனர்.
வலையபட்டி முருங்கை இலைகள் ஆண்டுதோறும் ஐரோப்பிய, ஆப்பிரிக்க நாடுகளுக்கு தலா 200 டன், 10 டன் பவுடர், காஸ்மெட்டிக் இதர தேவைகளுக்காக 100 லிட்டர் ஆயில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. வருங்காலங்களில் முருங்கை இலை, காய்களின் ஏற்றுமதி மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.